/* */

முறிந்தது முப்பதாண்டு கால நட்பு: மணிரத்னம் - வைரமுத்து

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வைரமுத்துவின் பாடல் இல்லை. இது அவர்களது நட்பின் முறிவைக் காட்டுகிறது.

HIGHLIGHTS

முறிந்தது முப்பதாண்டு கால நட்பு: மணிரத்னம் - வைரமுத்து
X

வைரமுத்து, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்குநர் மணிரத்னத்தின் 'ரோஜா' திரைப்படத்திலிருந்து அவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் வைரமுத்து பாடல் எழுதி வந்தார். ஆனால், இன்னும் பத்து நாட்களில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் வைரமுத்துவின் பாடல் இல்லை.

சற்றேறக்குறைய முப்பதாண்டுகளாக இருவருக்குள்ளும் இருந்த நட்பு இதனால், முறிந்தது என்பதுதான் இருவரின் நெருங்கிய வட்டத்தினர் கூறும் கருத்தாகும். 'பொன்னியின் செல்வன்' படத்தில் கபிலன், இளங்கோ கிருஷ்ணன், வெண்பா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

இந்தநிலையில், சென்னையில் நேற்று(19/09/2022) நடந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இயக்குநர் மணிரத்னம், வைரமுத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

''வைரமுத்துவைவிட திறமையான பாடலாசிரியர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி பன்னெடுங்காலமாக உள்ளது. தமிழ் சினிமாவில் நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். திறமையான புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்கள்.

அதைப்போலவே, தமிழ் மொழியில் நிறைய வளம் இருக்கிறது. நான் வைரமுத்து சாருடன் நிறைய படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். நானும் ரகுமானும் இணைந்து அவருடைய நிறைய கவிதைகளை பாடல்களாக்கியுள்ளோம். அவர் ஓர் அற்புதமான கவிஞர். ஆனால், அவரைவிட புதிய திறமையான பாடலாசிரியர்கள் நிறைய பேர் வருகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

Updated On: 20 Sep 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’