/* */

'கழகத்தலைவன்' கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால்..!

Nidhi Agarwal Back-நடிகை நிதி அகர்வால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு, மீண்டும் தமிழில் 'கழகத்தலைவன்' படத்தின் மூலம் நாயகியாக களம் இறங்குகிறார்.

HIGHLIGHTS

கழகத்தலைவன் கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால்..!
X

நடிகை நிதி அகர்வால்

Nidhi Agarwal Back-நடிகை நிதி அகர்வால் 'முன்னா மைக்கேல்' எனும் இந்தி படத்தின் மூலம் திரையுலகில் தனது அறிமுகக் கணக்கைத் தொடங்கியவர், தமிழ்த் திரையுலகில் 'ஈஸ்வரன்' படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு நாயகியாக தமிழில் தடம் பதித்தார் நிதி அகர்வால்.

'ஈஸ்வரன்' படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்தப் படம் நிதி அகர்வாலுக்கு நல்லதொரு பெயரை நல்கியது. அப்படத்தில் இடம்பெற்ற 'மாங்கல்யம் தந்துனானே…' பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இதனால் நிதி அகர்வால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சாங்கூட்டுக்குள் சில்லென்று இடம் பிடித்தார்.

இந்தநிலையில் நடிகை நிதி அகர்வால், தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள 'கழகத்தலைவன்' படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக கமிட் ஆகியுள்ளார். மேலும், தெலுங்கில், 'ஹரிஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், உடற்பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும், அதேபோல, யோகா செய்வது பிடிக்கும் அதில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ஒரு ரசிகர் நீங்கள் நடிகை ஆகவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என எழுப்பிய கேள்விக்கு, ''நான் நடிகையாகவில்லை என்றால், பேஷன் டிசைனிங் படித்துவிட்டு பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன், என்னுடைய குடும்பத்தினர் பிஸ்னஸ் செய்து வருவதால், நானும் கண்டிப்பாக என்னுடைய தொழிலை செய்திருப்பேன்'' அதிரடி பதிலளித்து அசத்தியுள்ளார் நடிகை நிதி அகர்வால்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 April 2024 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு