/* */

ராமர் வேடத்தில் என்டிஆர் வெற்றி பெற்றது எப்படி?

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹீரோவாக இருந்து மறைந்தவர். என்.டி.ராமா ராவ். கண்ணன், கிருஷ்ணர் வேடம் என்றால் அவர் முகம் மட்டுமே நினைவுக்கு வரும்.

HIGHLIGHTS

ராமர் வேடத்தில் என்டிஆர் வெற்றி பெற்றது எப்படி?
X

என்.டி.ராமாராவ் கண்ணன் மற்றும் கிருஷ்ணர் வேடங்களில் (கோப்பு படம்)

வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் இதுவரை நேரில் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இருந்தால் இப்படித்தான் இருப்பார் போல என்ற ஒரு வரையறையை தந்தவர் சிவாஜி. அப்படியே கண்முன் காட்சியளித்தார். அதே போல் சிவபெருமானாக திருவிளையாடல் படம். கர்ணனாக கர்ணன் திரைப்படம், அப்பர் என பல கதாபாத்திரங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தவர் சிவாஜி.

இப்படி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் சிவாஜி என்றால் ஆந்திரா மக்களுக்கு பொக்கிஷமாக வாழ்ந்தவர் என்.டி.ராமராவ். இவர் பெரும்பாலும் கிருஷ்ணர், ராமர் வேடங்களில் நடித்து இன்று பெரும்பாலான ஆந்திர மக்கள் தங்கள் வீடுகளில் இவர் படத்தை பூஜித்து வருகின்றார்களாம்.

ஒரு முறை என்.டி.ராமராவிடம் ஒரு செய்தியாளர் ‘இப்படி புராண கதைகளில் நடிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்காதா?’ என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு என்.டி.ராமராவ் ‘புராண கதைகளை ஏற்கும் போது நான் நடிக்கவே மாட்டேன் என்பது தான் உண்மை. மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் போது ஆடவேண்டும், ஓட வேண்டும், சண்டையிட வேண்டும்.

ஆனால் புராண கதைகளை ஏற்கும் போது நான் ராமனாகவோ கிருஷ்ணனாகவோ நடிக்கவே மாட்டேன். வசனங்களை கூட அமைதியாகவோ நிதானமாகவோதான் பேசுவேன். அதே மாதிரி ஒருவரை பார்த்து வசனத்தை பேசும் போது எதிரே இருக்கும் நபரை பார்க்கவே மாட்டேன். அவருக்கு பின்னால் ஒரு பிம்பம் இருப்பதை போல் உணர்ந்து அந்த சூன்யத்தை பார்த்துதான் பேசுவேன்.’ என்று கூறியிருக்கிறார்.

Updated On: 24 Jan 2024 8:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!