/* */

நடிகர் பார்த்திபன் பாராட்டில் சிலம்பரசன்… சீக்ரெட் என்ன..?

நடிகர் சிலம்பரசனைப் பாராட்டி இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நடிகர் பார்த்திபன் பாராட்டில் சிலம்பரசன்… சீக்ரெட் என்ன..?
X
நடிகர் சிலம்பரசன், இயக்குனர் பார்த்திபன்.

நடிகர் சிலம்பரசனின் திரைப்பயணத்தில் அண்மைக்காலம் அமோகமான சூழ்நிலையை அள்ளித் தந்திருக்கிறது. அதன் தொடக்கம் சிறப்புடன் பயணிக்கிறது. ஆம். கடந்த காலங்களில் தொடர்ந்து தோல்விகளைத் தந்த சிலம்பரசனின் படங்களால் அவரது ரசிகர்கள் துவண்டு போயிருந்தனர். ஆனால், இப்போதைய நிலைமை அப்படி இல்லை என்று சிலம்பரசனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் வெற்றி புதிய உற்சாகத்தைக் கொடுத்து பூரிப்படைய வைத்திருக்கிறது.

இந்தநிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி உள்ள 'பத்து தல' படத்தை வெகுவாகப் பாராட்டி சிலம்பரசனையும் படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதன் சீக்ரெட் என்ன என்கிற கேள்வியும் ஒருபுறம் திரைப்பட விமர்சகர்களால் திரித்துவிடப்பட்டுள்ளது.


நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தை, 'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' திரைப் படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தத் திரைப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோரோடு, மலையாள நடிகை அனு சித்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தத் திரைப் படத்தைத் தயாரிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த காலங்களில் தோல்விப் படங்களில் நடித்து மனம் துவண்டு போயிருந்த நடிகர் சிலம்பரசனுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப் படம். டைம் லூப் முறையில் வெளியான இந்தத் திரைப் படம் வசூலை வாரிக்குவித்தது. அதோடு, நடிகர் சிலம்பரசனை உயரத்தில் உயர்த்த வித்திட்டது. இந்தத் திரைப் படத்தை அடுத்து வெளியான இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படமும் அமைதியாக ஐம்பது நாட்களைக் கடந்து வெற்றிப்படமாக வாகை சூடியுள்ளது. இதன் மூலம் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் தூக்கிப் பிடித்ததோடு கோலிவுட்டில் தன் புகழால் மீண்டும் கோலோச்சத் தொடங்கியுள்ளார் சிலம்பரசன்.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான, 'முஃப்தி' திரைப் படத்தின் ரீமேக் படம்தான் 'பத்து தல'. இத்திரைப் படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்து முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. 'பத்து தல' திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், இத்திரைப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. திரையரங்குகளில் படம் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் இந்தத் திரைப்படம் வெளியாகும் என்கின்றனர் படக்குழுவினர்.


இந்தநிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிலம்பரசனுன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "ஒரு இரவின் ஒளியில்...பத்து தலையுடன்! பத்து தலையின் மொத்த மூளையும் ஒத்த தலையில். விசேட திறமையை பெற்றவர். பெற்றவரிடமிருந்தும், தான் பெறும் அனுபவத்திலிருந்தும் கற்றவர். சந்திக்கும் போது மட்டும் இணையும் நாள் குறித்து சிந்திப்போம். இணையும் நாளில் வெற்றியை சந்திப்போம்". என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவினைப் பார்த்த எல்லோருக்கும் இருவரும் சேர்ந்து நடிக்கப் போகும் தகவலின் வெளிப்பாடு இது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Updated On: 9 Nov 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...