/* */

சுலபமாக எதுவும் கிடைக்காது! இது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்

நாடோடி மன்னன் படத்தை பொறுத்த வரை துவக்கம் முதலே எல்லோமே எம்ஜிஆருக்கு பிரச்சனை தான். அப்படி வெளியான அந்த படம் எம்.ஜி.ஆரை பெரிய நடிகராக மாற்றியது

HIGHLIGHTS

சுலபமாக எதுவும் கிடைக்காது! இது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்
X

கோப்புப்படம் 

எம்.ஜி.ஆர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் தான் நாடோடி மன்னன்.முதல் படத்திலேயே ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். திட்டமிட்டதை விட செலவு அதிகமாக அதுவரை தான் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவு செய்தார். அதோடு, சொந்தமாக வாங்கியிருந்த வீட்டையும் அடமானம் வைத்தார். கடனும் வாங்கினார்.

இந்த படம் வெற்றி அடைந்தால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நான் நாடோடி என சொன்னார். அந்த அளவுக்கு பணத்தை இதில் போட்டிருந்தார் எம்.ஜி.ஆர். இந்த படம் உருவாகும் போதே கடனை கேட்டு அவருக்கு பலரும் நெருக்கடி கொடுத்தனர். சிலர் நீதிமன்றத்தை நாடி அவரின் வீட்டை அபகரிக்கவும் முயன்றனர். அதையெல்லாம் சமாளித்து படத்தை எடுத்தார். இந்த படத்தை பொறுத்த வரை துவக்கம் முதலே எல்லோமே அவருக்கு பிரச்சனை தான்.

நாடோடி மன்னன் படத்தை துவங்கிய போது அதற்கு அவர் வைத்த பெயர் உத்தம புத்திரன். ஆனால், அதே பெயரில் சிவாஜியும் ஒரு படத்தை துவங்க அந்த தலைப்பை விட்டுக்கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஹாலிவுட்டில் வெளியான The Prisioner of Zenda என்கிற படத்தின் கதையை தழுவியே நாடோடி மன்னன் பட கதையை உருவாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால், இதே கதையை மையமாக வைத்து நடிகை பானுமதியும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். எனவே, ‘The Prisioner of Zenda படத்தின் கதையை வைத்து தமிழில் நான் ஒரு படமெடுக்க திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் வீட்டு கொடுங்கள்’ என அவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் மறுத்து விட்டார்.

நாடோடி மன்னன் பட கதை என் மனதில் நன்றாக உருவாகி இருக்கிறது. The Prisioner of Zenda படத்தில் வரும் மன்னன் வேடம் மட்டுமே நாடோடி மன்னன் படத்திலும் வரும். மற்றபடி நாடோடி மன்னன் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், அதை எடுக்க வேண்டாம் என நீங்கள் கேட்காதீர்கள்’ என டீசண்ட்டாக சொல்லி விட்டார்.

உடனே பானுமதி பிடிகொடுக்கவில்லை என்றாலும் ஒரு வாரம் கழித்து ‘சரி நீங்களே அந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என எம்.ஜி.ஆரிடம் சொல்லி விட்டார் பானுமதி. நாடோடி மன்னன் படத்தில் கதாநாயகியாவும் அவரே நடித்தார். ஆனால், 80 சதவீதம் படம் முடிந்த நிலையில் எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டு விட்டு படத்திலிருந்து விலகி விட்டார். அதன்பின் சரோஜா தேவியை சில காட்சிகளில் நடிக்க வைத்து படத்தை முடித்தார் எம்.ஜி.ஆர்.

அப்படி வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று எம்.ஜி.ஆரை பெரிய நடிகராக மாற்றியது. அவருக்கு ரசிகர் கூட்டத்தையும் இப்படம் உருவாக்கியது.

Updated On: 24 Feb 2024 3:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!