/* */

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் நிவாஷினி

nivashini eliminated from bigg boss 6, bigg boss 6 nivashini, bigg boss season 6பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினிவெளியேற்றப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் நிவாஷினி
X

பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி வெளியேற்றப்பட்டார்.

nivashini eliminated from bigg boss 6, bigg boss 6 nivashini, bigg boss season 6உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 6 தமிழ் சீசன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 6 தமிழ் சீசன் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கியது. தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் துவக்கத்தில் 21 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் பிரபல யூடியுபர் ஜி. பி. முத்து முதலில் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்துவெளியேறினார். அதனைத் தொடர்ந்து மெட்டி ஒலி சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவரது நடத்தை மற்றும் சக போட்டியாளர்களிடம் குறிப்பாக பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட ஏற்பட்டதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெளியேற்றப்பட்டதாக கமல்ஹாசன் கூறினார்.

nivashini eliminated from bigg boss 6, bigg boss 6 nivashini, bigg boss season 6அதனை தொடர்ந்து பொம்மை டாஸ்க் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் பிக் பாஸ் வீடு திடீர் என அரண்மனை போல் மாறியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ராஜா, ராணி இளவரசி , மற்றும் பணியாளர்கள் என வேஷம் போட்டு கொண்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை தனலட்சுமி திடீரென தனக்கு திருடிஎன பட்டம் சூட்டிவிட்டதாக கூறி கதறினார். இந்த சூழலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து நிவாசினி திடீரென எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். நாமினேசன் லிஸ்டில் கடைசி இருவராக நிவாஷினி மற்றும் அசிம் ஆகியோர் இருந்தனர்.அப்போது அசிம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்ததால் நிவாஷினி எலிமினேட் உறுதியானது. அதன் பின்னர் எல்லோருடன் விடைபெற்று நிவாஷினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார் .பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவரை மற்றவர்கள் பார்த்து கிண்டல் செய்தனர்.வெளியே போனதும் நேராக நீ யாரை பார்க்க போறே என தெரியும் என ஆயிஷா கிண்டல் அடித்தார்.

nivashini eliminated from bigg boss 6, bigg boss 6 nivashini, bigg boss season 6பிக் பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே அசல் கோளாறு வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் நிவாசினி என்பது குறிப்பிடத்தக்கது. அசல் ஏண்டா நீ வெளியே போனாய் தினமும் உன் முகத்தில் தானே விழிக்கிறேன். இனி யார் முகத்தில் விழிப்பேன். எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். வேறு யாரையாவது வெளியேற்றி இருக்கக் கூடாதா என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை மனதில் வைத்தே ஆயிஷா நீ அசல் கோளாறை தான் பார்க்கப் போவாய் என கலாய்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Nov 2022 8:18 AM GMT

Related News