/* */

ஹாப்பி நியூஸ் மச்சான்ஸ்: நமீதாவிற்கு இரட்டை குழந்தை

Namitha Tamil Actress - நடிகை நமீதா தனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஹாப்பி நியூஸ் மச்சான்ஸ்: நமீதாவிற்கு இரட்டை குழந்தை
X

Namitha Tamil Actress -தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக, கவர்ச்சிப் புயலாக வலம் வந்தவர் நடிகை நமீதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமான நமீதா கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கினார்.

விஜய், அஜித், சரத் குமார், சத்தியராஜ் , விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

நமீதா தனது ரசிகர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைபார். நமீதாவின் மச்சான்ஸ் என்ற செல்லமான அழைப்புக்காக ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தனர்.

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று வந்த நமீதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தனது காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்ட நமீதா, திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.

பாஜக-வில் சேர்ந்து அரசியல் பிரவேசம் செய்த நமீதா, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில்தான், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், தனது 40வது பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக நமீதா அறிவித்தார் , தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அவர் கர்ப்பமாக உள்ள போட்டோஷூட் ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆனது.

தொடர்ந்து, நமீதா தான் கர்ப்பமாக இருப்பதை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, நடிகை நமீதா தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக ஹாப்பி நியூஸை தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் உள்ள ஒரு தனியார் ,மருத்துவமனையில் தான் பிரசவம் நடந்திருக்கிறது.

நடிகை நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அறிந்து நமீதாவின் மச்சான்ஸ் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 11:42 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!