பாரதிராஜாவை சந்தித்த மணிரத்னம்! ஏன் தெரியுமா?

பாரதிராஜாவை சந்தித்த மணிரத்னம்! ஏன் தெரியுமா?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாரதிராஜாவை சந்தித்த மணிரத்னம்! ஏன் தெரியுமா?
X

இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம் சந்திப்பு நடைபெற்ற நிலையில் அவர்களது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதற்கான காரணம் என்ன எதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என ரசிகர்கள் யோசித்து வந்தனர். இந்நிலையில், பாரதிராஜாவை ஏன் மணிரத்னம் சந்தித்தார் என்பது தெரியவந்துள்ளது.


விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் தயாரித்து இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படம் இரண்டு பாகங்களாக தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட 500 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.


இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான புரமோசன் பணிகளை மார்ச் மாத இறுதியில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டவர்களிடம் 19 நாட்களுக்கு கால்ஷீட் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


முன்னதாக பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக பலரையும் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். அதில் ஒரு பகுதியாகவே பாரதிராஜாவை சந்தித்திருக்கிறார்.


நாளை மார்ச் 20ம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் இந்த பாடல் அக நக என்று துவங்குகிறது. அடுத்த வாரத்திலேயே இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Updated On: 19 March 2023 10:28 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
 2. திருவள்ளூர்
  ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
 3. கும்மிடிப்பூண்டி
  ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
 4. கும்மிடிப்பூண்டி
  கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
 5. சினிமா
  பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
 6. பூந்தமல்லி
  இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
 7. இந்தியா
  ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
 8. கோவில்பட்டி
  கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
 9. கும்மிடிப்பூண்டி
  பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
 10. டாக்டர் சார்
  பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...