/* */

ஐந்தாவது படத்திலேயே பாலிவுட் செல்லும் இளம் இயக்குனர் – அப்போ தளபதி 67 படம்?

Lokesh Kanagaraj makes debut in Bollywood - எடுத்த 4 படங்களிலும் வெற்றிக்கனியை சுவைத்து உள்ள இயக்குனரை, பார்த்துக்கொண்டு பாலிவுட் திரையுலகம் சும்மா இருக்குமா?

HIGHLIGHTS

ஐந்தாவது படத்திலேயே பாலிவுட் செல்லும் இளம் இயக்குனர் – அப்போ தளபதி 67 படம்?
X

Lokesh Kanagaraj makes debut to Bollywood -  பாலிவுட்டிற்கு செல்லும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj makes debut in Bollywood - கோலிவுட்டின் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது ஐந்தாவது படத்தில் சல்மான் கானை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோலிவுட்டில் மாநகரம் படத்தின் மூலம் தியக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிற்கு என்றே பாத்தியப்பட்ட கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லாமல், புதுவிதமாக இருந்ததன் காரணமாக, அந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. பின் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படமும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நற்பெயரை வாங்கித் தந்தது.

தான் நினைத்த கதையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது அதற்கேற்ற திரைக்கதை எழுதி இயக்கிய படங்கள் பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக, லோகேஷ் கனகராஜ் உயர்ந்தார்.

Lokesh Kanagaraj makes debut in Bollywood - முந்தைய இரண்டு படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து 3வது படத்திலேயே, தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடிப்பதால் , 'மாஸ்டர்' படம் கமர்சியல் படமாகவே இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையிலும், அந்த படத்தின் திரைக்கதையிலும் தனக்கென தனி முத்திரையை பதித்து இருப்பார் லோகேஷ் கனகராஜ். அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் பேனரில், விக்ரம் படத்தின் மூலம் கமல்ஹாசனுடன் கைகோர்த்தார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி என ஜாம்பவானகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு என்று தனது திரைக்கதையில் உரிய இடமளித்து சிறப்பாக இயக்கி இருந்தபடியால், விக்ரம் படமும் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாது, பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனிலும், இமாலய சாதனை நிகழ்த்தி உள்ளது.

Lokesh Kanagaraj makes debut to Bollywood - எடுத்த 4 படங்களிலும் வெற்றிக்கனியை சுவைத்து உள்ள இயக்குனரை, பார்த்துக்கொண்டு பாலிவுட் திரையுலகம் சும்மா இருக்குமா?

தனது ஐந்தாவது படத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் கானை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சல்மான் கான் இடையேயான சந்திப்பு சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இதில் லோகேஷ் சொன்ன கதை, சல்மான் கானுக்கு பிடித்து இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'தளபதி 67' ? : மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த வெற்றிக் கூட்டணி விரைவில் மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் விஜயை இயக்க உள்ளதாக, இயக்குனர் லோகேஷ் அறிவித்து விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்து சென்று இருந்தார். ஆனால், அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தற்போது 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், அடுத்த படம் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தான் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், பாலிவுட்டில் சல்மான் கானிற்கு படம் பண்ண இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்கிறது என்று விஜய் ரசிகர்கள் , காதுபடவே புலம்புவதை ஆங்காங்கே காண முடிகிறது!

Updated On: 19 July 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...