/* */

நடிகை ரம்பா பிறந்த நாள் இன்று

தொடையழகி விஜயலட்சுமி @ ரம்பாவுக்கு இன்று பிறந்தநாள்.

HIGHLIGHTS

நடிகை ரம்பா பிறந்த நாள் இன்று
X

தொடையழகி விஜயலட்சுமி @ ரம்பா

ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.

அவர் ஆந்திர மாநிலம் விசயவாடா வைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.

ரம்பா நடித்த முதல் படம் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும். மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும்.

தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர்.

ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து த்ரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர். ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

90 களில் விஜய், அஜித், கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, உச்ச கட்ட நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டாலும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.

இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரஜித் என்கிற இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின், இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு வந்தாலும், அவை அனைத்தையும் மீறி இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

Updated On: 5 Jun 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்