/* */

லியோ கிளைமாக்ஸ்... கமல்ஹாசனின் சூப்பர் எண்ட்ரி!

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.

HIGHLIGHTS

லியோ கிளைமாக்ஸ்... கமல்ஹாசனின் சூப்பர் எண்ட்ரி!
X

காஷ்மீரில் நடைபெற்று வந்த லியோ படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. கடந்த வாரத்துடன் பேக் அப் செய்துவிட்டு சென்னை திரும்பிய லோகேஷ் அன்ட் கோ, விரைவில் சென்னையில் மீண்டும் அடுத்த ஷெட்யூலைத் துவங்க இருக்கிறது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இரண்டாவது படம் லியோ. மாஸ்டர் படத்துக்கு பிறகு இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் எனும் மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்த பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் லோகேஷ். விஜய்க்கும் ஏற்கனவே இந்திய அளவில் ரசிகர்கள் இருப்பதால் இந்த படத்துக்கு மிகப் பெரிய டாக் எழுந்துள்ளது.

லியோ படத்தில் விஜய் மட்டுமின்றி திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். கொடைக்கானல், சென்னை என சின்ன சின்ன ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு காஷ்மீருக்கு பறந்தது படக்குழு. கிட்டத்தட்ட 3 மாதங்கள் படப்பிடிப்பு அங்கு நடந்தது. இந்நிலையில் இப்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. விஜய், திரிஷா காட்சிகள் 22ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு 23ம் தேதி சென்னை திரும்பியது படக்குழு.

விஜய், திரிஷா ஆகியோருக்கான காட்சிகள் பெரிய பாதிப்பை தரும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதுதான் படத்தின் மற்ற காட்சிகளுக்கு காரணமாக அமையுமாம். இதனால் கிளைமாக்ஸில் ஏற்படும் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியும் உருவாகிறதாம். அந்த காட்சிதான் அடுத்து படம்பிடிக்கப்படவிருக்கிறது.

மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருடன் விஜய்க்கு இருக்கும் காம்பினேஷன் காட்சிகள் தனித்தனியே படம்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சி கடைசியாக படம்பிடிக்கப்பட இருக்கிறதாம்.

சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம்.

23 ம் தேதி சென்னை திரும்பும் லியோ படக்குழு அடுத்து 10 நாட்கள் ஓய்வெடுக்கிறது. இதனையடுத்து ஹைதராபாத் போவதற்கு முன்னதாக சென்னையில் ஒரு குட்டி ஷெட்யூல் போகிறதாம். இதில் பஹத் பாசில், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 2 April 2023 10:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்