/* */

அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! இதுக்காகத்தானா?

உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருக்கிறார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

HIGHLIGHTS

அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்! இதுக்காகத்தானா?
X

உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருக்கிறார். புராஜக்ட் கே படத்தை காமிக் கான் விழாவில் அறிமுகப்படுத்த சென்ற படக்குழுவினருடன் நாளை இணைகிறார்.

உலகின் மிகப் பெரிய சினிமா நிகழ்ச்சிகளில் ஒன்றான காமிக் கானில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு பட அறிமுகம் திரையிடப்படுகிறது. பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ஸ் இரண்டையும் அங்கே அறிமுகப்படுத்தவுள்ளனர். இதனால் படக்குழு நேற்றே அமெரிக்கா புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இன்று அங்கு சென்றிருக்கிறார்.

நாளை இரவு தொடங்கும் அந்த விழாவில் பல்வேறு திரைப்படங்களின் உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் புராஜக்ட் கே படத்தை அறிமுகப்படுத்த இருப்பதன் மூலம் உலக அளவில் படத்தின் மீது கவனம் ஏற்படும். இது வியாபாரத்துக்கு பெரிய அளவில் உதவி செய்யும். இது மட்டுமின்றி கமல்ஹாசன் ஏற்கனவே உலக அளவில் பரீட்சியமானவர் என்பதால் அவரை விழாவில் பேச வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் விழாவில் கலந்து கொண்டதாக தெரியவில்லை. கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்களுடன் இயக்குநர் நாக் அஸ்வினும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். தயாரிப்பு தரப்பிலிருந்தும் முக்கிய நபர்கள் விழாவுக்கு சென்றிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து உலகளாவிய வியாபாரத்தையும் விளம்பரத்தையும் சேர்த்தே தயாரிப்பு நிறுவனம் துவங்கும் என்கிறார்கள்.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2, மணிரத்னம் படம், ஹெச் வினோத் படம், புராஜக்ட் கே என பெரிய பட்ஜெட் படங்களாக கமிட் ஆகியிருக்கிறார் கமல்ஹாசன். இப்போது கேஜிஎஃப் பிரசாந்த் நீல், ஆர்ஆர்ஆர் ராஜ மவுலி ஆகியோரும் தங்களது படங்களில் நடிக்க கேட்டிருக்கிறார்களாம். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு பிறகே இந்த படங்களில் நடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துவிட்டார் கமல்ஹாசன்.

Updated On: 19 July 2023 10:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்