/* */

விக்ரம் போல சோலோ ரிலீஸ்! உலகம் முழுக்க சுற்றுப் பயணம்! வேற லெவலுக்கு திட்டமிடும் ஜெயிலர் படக்குழு!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் செய்த புரமோசன் பணிகளைப் போல ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்துக்கும் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

விக்ரம் போல சோலோ ரிலீஸ்! உலகம் முழுக்க சுற்றுப் பயணம்! வேற லெவலுக்கு திட்டமிடும் ஜெயிலர் படக்குழு!
X

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் செய்த புரமோசன் பணிகளைப் போல ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்துக்கும் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | Rajinikanth lokesh kanagaraj movie


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தை கமல்ஹாசனே தயாரித்திருந்தார். அவர் தயாரித்து நடித்ததுடன் நிற்காமல் சென்னை, கொச்சி, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, துபாய் என பல இடங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்தார். அது மட்டுமின்றி அந்தந்த மொழிகளில் முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் படத்தைப் பற்றி தெரியவைத்தார். இதனால் அந்த படம் பல்வேறு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. | Vikram Kamal Haasan

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்துக்கும் இதே வகையில் புரமோசன் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள். | Jailer promotion plans


ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் பங்கு பெறும் புரமோசன் நிகழ்ச்சி கொச்சியிலும், ஷிவராஜ்குமாருடன் பெங்களூருவிலும், ஹைதராபாத்திலும் புரமோசன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனோடு சேர்த்து சென்னையில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனையும் கூப்பிடும் யோசனை இருக்கிறதாம். | jailer movie actors list


இந்தியா தவிர உலகின் பல நாடுகளிலும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் இருப்பதால், துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவுள்ளார்களாம். அநேகமாக ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றே கூறப்படுகிறது. உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்தில் ஒரு சில முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க கேட்கலாம் என ஜெயிலர் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. | jailer movie release date rajinikanth

இதுமட்டுமின்றி சன் தொலைக்காட்சியின் பிற மொழி சேனல்களில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு நடக்கிறதாம். | jailer movie digital rights


ஆகஸ்ட் 10ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு தகுந்தார்ப் போல ஜூலை 29ம் தேதி முதல் புரமோசனுக்கு திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அடுத்த 1 மாதத்துக்கு பெரிய அளவில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை என்பதை தற்போதைக்கு உறுதி செய்துள்ளது படக்குழு. அக்டோபர் மாதம்தான் லியோ படம் வரவுள்ளது என்பதால் நிச்சயமாக 50 நாட்கள் வரை ஜெயிலர் படம் சிறப்பான கலெக்ஷன்களைச் செய்யும் என கணித்திருக்கிறார்கள். | jailer vs maaveeran

இப்படி திட்டமிட்டிருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் அந்த படத்துக்கு தியேட்டர் கிடைக்காது என்பதை மறைமுகமாக உணர்த்தி வரும் ஒரு தரப்பினர், படத்தை தள்ளிப்போட அழுத்தம் கொடுத்து வருகின்றனராம். இதனால் படத்தை ஒரு வாரம் முன்னதாக வெளியிடலாமா என யோசித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். | maaveeran movie release date

Updated On: 25 April 2023 2:52 PM GMT

Related News