/* */

நடிகை மீனா 2வது திருமணம் செய்யப்போகிறாரா?

Actress Meena reacts to her second marriage rumours - நடிகை மீனா 2வது திருமணம் செய்துகொள்வதாக வரும் தகவல்கள் வதந்தியே என தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நடிகை மீனா 2வது திருமணம் செய்யப்போகிறாரா?
X

நடிகை மீனா.

Actress Meena reacts to her second marriage rumours - நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து ரஜினி நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படம், ஜப்பான் நாட்டில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து அந்நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிகை மீனா நடித்துள்ளார்.

மூத்த நடிகையும் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான மீனா, சமீபத்தில் தனது கணவரை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் கொரோனா தொற்று காரணமாக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் மீனாவின் கணவர் 50 வயதிலேயே காலமானது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீனாவுக்கு 46 வயதே ஆன நிலையில், அவரின் குடும்பத்தினர் தற்போது மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

நடிகை மீனா மீண்டும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியிருந்தாலும், அவர் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமாக உள்ளாரா என்பது தெரியவில்லை. கூடுதலாக, மீனா தனது குடும்பத்தில் அறிமுகமான ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அவரது மறைந்த கணவரின் நண்பராக இருக்கலாம் என்றும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009ல் மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் திருமணம் நடந்தது. சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்த மீனாவின் கணவர் இந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

actress meena second marriage update news

கணவர் இறந்ததைத் தொடர்ந்து மீனாவின் இரண்டாவது திருமணம் அவருக்கு மீண்டும் தைரியத்தைத் தரும் என்று நம்புவதாக மீனாவின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மீனா தற்போது குடும்ப நண்பரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார் எனவும், மறுபுறம் அவர் இரண்டாவது திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும் தனது குடும்ப உறுப்பினர்களிடம் மீனா தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மீனாவின் மகளுக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினர் மீனாவை வற்புறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை மீனா, தற்போது எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் திருமணம் பற்றியெல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மற்றபடி என்னை பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தியே என தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Dec 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?