/* */

புடவை அணிந்தால்...'சீதாராமம்' நாயகியின் அசத்தலான பேட்டி

நடிகை மிருணாள் தாக்கூர், தனக்குப் பிடித்த உடை, இந்தியப் பாரம்பரிய உடையான புடவைதான் என்று தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

புடவை அணிந்தால்...சீதாராமம்  நாயகியின் அசத்தலான பேட்டி
X

நடிகை மிருணாள் தாக்கூர்.

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த 'சீதா ராமம்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார் நடிகை மிருணாள் தாக்கூர். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழிகளில் வெளியானது. காதலர்களை வெகுவாகக் கவர்ந்தது இப்படம். அதோடு, வெளியான அனைத்து மொழிகளிலும் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில், ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் லக்மே ஃபேஷன் வீக் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு பேஷன் வீக் நிகழ்ச்சி மும்பையில் நேற்று(12/10/2022) கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் நடிகை டயானா பென்டி ஆகியோர் நவீன அலங்காரம் மிக்க உடையில் தோன்றி மேடையை அலங்கரித்தனர்.

நடிகை மிருணாள் தாக்கூர், 'சீதா ராமம்' படத்தில் ஒரு தேவதையென சேலையில் நடந்து வந்து ஈர்த்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில், சிவப்பு நிற லெஹெங்காவில் ஒரு ரோஜாப் பூந்தோட்டமே மேடையேறியதுபோல் செம்மாந்த நடையோடு நடந்து வந்தார். மேடையில் அடிமேல் அடியெடுத்து வைத்து அனைவரின் விழிகளையும் விரியவைத்து புருவம் உயர்த்தி வியக்கும் வண்ணம் கண்கொட்டாமல் தன்மீதே எல்லோர் பார்வையும் விழும்படி ஒய்யாரமாக வந்தார் மிருணாள் தாக்கூர். லக்மே பிராண்ட் தூதராகவும் இருக்கும் மிருணாள் தாக்கூர் சிவப்பு நிற லெஹங்காவுக்கு மேட்ச்சாக பச்சைக் கல் பதித்த நெக்லஸ், அதற்கு ஏற்றார் போல கம்மல் அணிந்திருந்தார்.

பேஷன் நிகழ்ச்சி முடிந்ததும், பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்த மிருணாள் தாக்கூர், ''இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைத்துப் பெருமை அடைகிறேன். ரசிகர்களாகிய உங்களால் , உங்கள் அன்பால்தான் இது சாத்தியமானது. ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றி.மேலும், நான் இந்திய உடை அணிவதை பெரிதும் விரும்புகிறேன். இருந்தாலும், சில நேரம் எந்த உடை போடுவது என்பதில் குழப்பம் வரும் நேரத்தில், இந்தியப் பாரம்பரிய உடையான புடவையை தேர்வு செய்து, 'சீதா ராமம்' நாயகியாகவே மாறிவிடுவேன்'' என்றார்.

அவரிடம் இன்ஸ்டாகிராமில் யாரை ஃபாலோ செய்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியதற்கு பதிலளித்த நடிகை மிருணாள் தாக்கூர், ''நான் குழந்தைகள், பூக்கள், பூனைகள் மற்றும் நாய்களைப் பின்தொடர்கிறேன். குறிப்பிட்ட யாரையும் நான் பாலோ செய்யவில்லை, ஆனால் எனக்கு மகிழ்ச்சியான, மனத்திற்கு பிடித்த பல விஷயங்களை நான் ஃபாலோ செய்து வருகிறேன்'' என்றார்.

நடிகை மிருணாள் தாக்கூர் தற்போது, 'பிப்பா', 'பூஜா மேரி ஜான்', 'ஆன்க் மிச்சோலி', 'கும்ரா' ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் நடித்த சீதா ராமம் படம் மிதமான வெற்றிகளைப் பெற்றிருந்த போதிலும் மிகைத்த புகழைத் தேடித் தந்தது. இப்படத்தின் மூலம் இவருக்கு, தெலுங்கிலும் தமிழிலும் அதிகப்படியான ரசிகர் பட்டாளம் கிடைத்துள்ளது. எனவேதான், ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ள அவ்வப்போது, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார் மிருணாள் தாக்கூர்.

Updated On: 13 Oct 2022 10:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு