/* */

திருமண விஷயத்தில், நயன்தாராவை பின்பற்றிய ஹன்சிகா

Hansika Motwani marriage will be streamed on OTT- நடிகை ஹன்சிகா, தனது திருமண விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.

HIGHLIGHTS

திருமண விஷயத்தில், நயன்தாராவை பின்பற்றிய ஹன்சிகா
X

 Hansika Motwani marriage will be streamed on OTT   - ஹன்சிகா மோத்வானி, தனது வருங்கால கணவருடன் உள்ள புகைப்படம்.

hansika marriage photos and videos on ott platform, hansika wedding photos, Hansika Motwani marriage will be streamed on OTT- நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் சோஹைல் கதூரியா என்பவருடன், ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.


திரைப்பிரபலங்களின் திருமணம் என்பது சமீபகாலமாக வியாபாரம் ஆகி வருகிறது. இதன்மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நடிகை நயன்தாராவின் திருமணத்தை, வீடியோ ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம், பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது.

இதன் காரணமாக திருமணத்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் வீடியோ எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றதால், சில முன்னணி நட்சத்திரங்கள் இவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள விருப்பம் காட்டவில்லை என கூறப்பட்டது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணமாகி குழந்தைகளே பிறந்துவிட்டது. ஆனால் இன்னும் இவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. அது எப்போ ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்தும், இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இது ஒருபுறம் இருக்க, தற்போது நடிகை ஹன்சிகாவும் இதே பார்முலாவை பின்பற்ற உள்ளாராம்.

நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூரில் உள்ள, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்பெல்லாம், நடிகைகள் திருமணம் என்பதை பத்திரிகைகள் வாயிலாகவே, மக்கள் தெரிந்துகொண்டனர். அதுவும் தவிர, அப்போதெல்லாம் அவர்களது திருமணத்தை, உலக அதிசயமாக யாரும் கருதவில்லை. ஆனால், இன்று 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழியை போல, சினிமா நடிகைகள், சினிமாவில் நடித்தாலும் வருமானம்தான், அவர்களது திருமணவிழாவை நடத்தினாலும் வருமானம்தான், என்ற புதிய பழமொழி உருவாகி இருக்கிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்ட 'பெருமை', விக்கி - நயன் ஜோடியையே சேரும்.

திருமண நிகழ்ச்சியில், நயன்தாரா பார்மூலாவை பின்பற்றி, பணம் சம்பாதிக்கும் ஹன்சிகா - கதுாரியா ஜோடி, அவர்களை போலவே, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளும் பெற்றுக்கொள்வார்களோ, என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதே நோக்கம். அதற்காக, படங்களில் 'எப்படி' வேண்டுமானாலும் நடிக்கும் அவர்கள், தங்களது சந்தோஷத்துக்காக 'எப்படி' வேண்டுமானாலும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள் என்றும் சமூக வலைதளங்களில், கமெண்ட்டுகள் வைரலாகி வருகிறது.

Updated On: 14 Nov 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...