/* */

நடிகை சமந்தா உயர்த்திய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Samantha Salary For Pushpa Movie - நடிகை சமந்தா அடுத்தடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

நடிகை சமந்தா உயர்த்திய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
X

நடிகை சமந்தா

Samantha Salary For Pushpa Movie -- நடிகை சமந்தா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார் மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். கடந்த 2007ம் ஆண்டு இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான 'ஏ மாயா சேசவா' முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

samantha salary

இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதன் பின் நடித்த பிருந்தாவனம், தூக்குடு, சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, அத்தாரிண்டிகி தாரேதி , கத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடுதல் சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

தற்போது ஹாலிவுட்டின் புதிய படம் ஒன்றும் அவர் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து வளர்ச்சி பெறும் நடிகை சமந்தா இப்போது தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. அதிலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா இடம்பெற்ற உ சொல்றியா மாமா பாடலுக்கு பின் சமந்தாவிற்கு பெரும் உச்சத்தை தேடித்தந்துள்ளது. இதனால், தற்போது அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கு அவர் ரூ.3.5 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Aug 2022 10:33 AM GMT

Related News