/* */

விமர்சனங்களைப் புறந்தள்ளி நிமிர்ந்து நிற்கும் தனுஷ்..!

நடிகர் தனுஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

விமர்சனங்களைப் புறந்தள்ளி நிமிர்ந்து நிற்கும் தனுஷ்..!
X

நடிகர் தனுஷ் 

நடிகர் தனுஷ் இன்று, தனது 40வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திளைக்கிறார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களின் வாழ்த்துகளால் மகிழ்வில் நிறைகிறார் தனுஷ். இத்தருணத்தில், இன்ஸ்டாநியூஸும் தனது வாழ்த்துகளைச் சொல்லி இணைந்து கொள்கிறது.

விதைக்குள் இருக்கும் விருட்சம் விதையாய் இருக்கும்போது வெளியில் தெரிவதில்லை. அதேநேரம், எல்லா விதைகளும் விருட்சமாவதில்லை. மேலும், அவமானங்கள், குறைசொல்லி குட்டுவைக்கும் விமர்சனங்கள், காலெடுத்து வைக்கும்போதே காலைவாரிவிட்டு வாய்ப்பைத் தட்டிவிடும் சதிவலைகள் என பல்வேறு முயற்சிகளின் முனைமுறிக்கும் செயல்களை எல்லாம் எவனொருவன் கண்டுகலங்காமல் உறுதியோடு பாதைசமைத்து தடையற்ற பயணத்தை தகவமைத்துக் கொள்கிறானோ அவன்தான் உயர்கிறான். தடைக்கற்கள் போட்டவர்கள் உடைபட உயர்வான்.

அப்படித்தான், நடிகர் தனுஷ் தனது 19-வது வயதில் 2002-ம் ஆண்டு முதன்முதல் 'துள்ளுவதோ இளமை' படத்தின் நாயகனாக அறிமுகமானபோது, அவரது உடல்வாகையும் அவரது பின்னணியாக அப்பா இயக்குநர், தயாரிப்பாளர், அண்ணன் இயக்குநர் என்று அவற்றையெல்லாம் கலந்துகட்டி மிக மோசமாகவெல்லாம் தனுஷை விமர்சனம் செய்தார்கள்.

ஆனால், அடுத்தடுத்து தனது முனைமுறியா முயற்சிகளால், அயற்சிக்கு இடம்கொடாத உழைப்பால், ஈடுபட்ட தொழில் மீது கொண்ட முழு உறுதியால் இன்று விமர்சித்த எல்லோரும் வியந்து நோக்கும் வண்ணம் நெடிதுயர்ந்து நிற்கிறார் நடிகர் தனுஷ்.ஆம். தமிழ்த்திரையுலகின் ஒரு நடிகராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கிய தனுஷ், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பன்மொழி நடிகராக வளர்ந்து நிற்கிறார். இதனிடையே பல்வேறு விருதுகள், பாராட்டுகள், எல்லாத் தளங்களிலும் எண்ணற்ற வரவேற்புகள் என்று புகழ் இவரது கரம்பிடித்து உயர்த்திச் செல்கிறது.

அதோடு, தனது அடுத்தடுத்தகட்ட முயற்சிகளாக தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என தன் பிறமுகமான பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தி அவை அத்தனையிலும் வெற்றிக்கொடிகட்டி சாதனைச் சரித்திரம் படைத்து வருகிறார். இன்னும் உயர்க… வாழ்த்துகள் தனுஷ்..!

Updated On: 28 July 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்