டி3 திரைவிமர்சனம்

டி3 படம் எப்படி இருக்கு திரைவிமர்சனத்தைக் காண்போம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
டி3 திரைவிமர்சனம்
X

இயக்குநர் பாலாஜி இயக்கி பிரஜின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டி3. இது ஒரு சீக்குவல் படம் என்பதாலும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்பதாலும் எப்படி இருக்கப்போகிறது என்கிற ஆவலோடு நாமும் படத்தைப் பார்க்கச் சென்றோம்.

கதைச் சுருக்கம்

பணி மாறுதல் காரணமாக குற்றாலத்திலிருக்கும் டி3 காவல்நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பேற்கிறார் பிரஜின். இவர் வந்த நேரம் விபத்து ஒன்றில் இறந்த பெண் வழக்கு வருகிறது. அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும்போது நூல் பிடித்தார்போல இதுமாதிரியான பல வழக்குகள் இருப்பதும் அவை சரியாக விசாரிக்கப்படாமல் முடிக்கப்படாமல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டு இருப்பதையும் கவனிக்கிறார். இதேபோல ஒரு விபத்தில் தனது மனைவியையும் பறி கொடுக்கவே இந்த பிரச்னை எதனால் யாரால் ஏற்படுகிறது என்பதை நோக்கி ஓட ஆரம்பிக்கிறார் பிரஜின். முடிவில் இதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.

விமர்சனம்

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களுக்கு எப்போதும் ஆடியன்ஸ் வரவேற்பு அளிப்பார்கள். இயக்குநர் கதையையும் திரைக்கதையையும் நேர்த்தியாக எழுதிவிட்டாலே பாதி பிரச்னை முடிந்துவிடும். மீதி நடிகர்களின் எதார்த்த நடிப்பில் வழக்கு போகும் வேகத்தில் நம்மை நாமே மறந்து படத்துக்குள் மூழ்கிவிடுவோம். அந்த வகையில் சிறப்பான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் பாலாஜி. தரமான படமா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றினாலும் இந்த படம் ஓரளவுக்கு பார்க்கும் வகையிலான படம்தான்.

மெடிக்கல் கிரைம் பற்றி பேசும் படங்கள் ஏற்கனவே நிறைய வந்திருந்தாலும் இந்த படமும் ரசிக்க வைக்கிறது. சில நடிகர்களுக்கு மட்டுமே காவலர் கெட்டப் சரிபட்டு வரும். அந்த வகையில் மற்றொரு நடிகராக பிரஜின் வந்திருக்கிறார். இனி அடுத்தடுத்து பல போலிஸ் கதைகள் இவரைத் தேடி போகலாம்.

ஆரம்பத்திலேயே மெடிக்கல் கிரைம் திரில்லர் படம் என்று நமக்கு புரிய வந்துவிடுவதால், அப்பாவியாக யார் இருக்கிறாரோ அவர்தான் வில்லன் என்பதை நம் மனது சொல்லிக் கொண்டே இருக்கும். இல்லை நான் வித்தியாசமாக படமெடுப்பவன் என்று கூறி ஒரு டிவிஸ்ட் வைத்து இறுதியில் நாம் யாரை நினைத்தோமோ அவரைத் தான் வில்லனாக்கி இருப்பார்கள்.

தொய்வு இல்லாத திரைக்கதை மற்றும் பிரஜின் நடிப்பு காரணமாக இந்த படம் எஸ்கேப் ஆகிவிடுகிறது. நிச்சயமாக ஒருமுறை படத்தை பார்க்கலாம். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், நான் அப்போவே நினச்சேன் ஏற்கனவே தெரியும் போன்ற கமெண்ட்களைத் தவிர்த்துவிட்டு படத்தை திரையரங்கில் பாருங்கள் படம் நிச்சயம் பிடிக்கும்.

Updated On: 18 March 2023 12:41 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  2. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
  3. சினிமா
    ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
  4. சினிமா
    திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
  5. திருவில்லிபுத்தூர்
    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு
  6. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே ரத்த தானம், இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
  7. சினிமா
    கமல் படத்தில் இணையும் அஜித் விஜய்.. இயக்குவது நம்ம லோகேஷ்!
  8. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே பாலை சாலையில் ஊற்றி போராட்டம்
  9. சினிமா
    மஞ்சக்காட்டு மைனா... நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் வைரல்
  10. நாமக்கல்
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பூசாரிகள் பேரவை...