/* */

உல்லாசப் படகுப் பயணம் :ஹரீஷ் கல்யாண் - அதுல்யா ரவி

ஹரீஷ் கல்யாணும் அதுல்யா ரவியும் இணைந்து நடித்துள்ள 'டீசல்' படத்தில் இடம்பெறும் உல்லாசப் படகுப் பயணம் ஹாட்.

HIGHLIGHTS

உல்லாசப் படகுப் பயணம் :ஹரீஷ் கல்யாண் - அதுல்யா ரவி
X

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம், 'டீசல்'. முழுக்க முழுக்க வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நாயகனாக ஹரீஷ் கல்யாணும் நாயகியாக அதுல்யா ரவியும் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் இயக்குநர் அமீர், கருணாஸ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய நிலையில், தற்போது ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து விட்டு விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இந்தப்படத்தை, எஸ்பி சினிமாஸ் தயாரித்து வருகிறது.

இந்தநிலையில், இந்தப் படத்திற்காக நடுக்கடலில் எடுக்கப்பட்ட படப்பிடிப்புகளில் ஹரீஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி பங்கேற்றனர். சூரிய அஸ்தமனத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வின் வீடியோவை அதுல்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் ரொமாண்டிக்காக அந்த வீடியோ அமைந்துள்ளது. 'ஓ மணப்பெண்ணே' உள்ளிட்ட காதல் கதைகளில் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்துவந்த ஹரீஷ் கல்யாண், தற்போது இந்தப் படத்தின்மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் அதுல்யா ரவி வழக்கறிஞராக நடித்து அசத்தியுள்ளார்.

Updated On: 30 July 2022 11:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது