/* */

இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் காலமான நாளின்று

பத்து வயசிலேலேயே பாடகனாக ஆகிவிட்டவர். எஸ்.வி.வெங்கட்ராமன் பதினோராவது வயதில் ஸ்டேஜ் ஆக்டராக ஆகிவிட்டார்.

HIGHLIGHTS

இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் காலமான நாளின்று
X

பத்து வயசிலேலேயே பாடகனாக ஆகிவிட்டவர் எஸ்.வி.வெங்கட்ராமன் பதினோராவது வயதில் ஸ்டேஜ் ஆக்டரா ஆகிவிட்டார். அப்போதே பாடல்களுக்கு இசையமைக்கும் ஞானம் இயற்கையாக இவருக்கு இருந்தது. இத்தனைக்கும் இவருக்கு வாத்தியார் கிடையாது. பகவான்தான் சிட்சை. அதற்குப்பின் கதாநாயகன், நகைச்சுவை, ஸ்த்ரீ பார்ட் ஆகிய எல்லா வேடங்களும் போட்டுள்ளார். கதை எழுதுவார், தயாரிப்பார். இவரே நாடகக் குழு வைத்திருந்தார்.

பம்பாயில் இவர் ஒரு சோசியல் மூவியில் நடிச்சிக்கிட்டு இருந்தார். அப்போது ஸ்டண்ட் சீனில் நடித்தபோது ஒரு ஆக்சி டெண்ட் நடந்துச்சு போச்சு. அதனால் மனசு உடைஞ்ச இவர் திரைப்படமே வேண்டாம் என்று விரக்தி யோடு இருந்தார். அந்த சமயத்தில் ஏவி.எம். செட்டியார்தான் இவரை உற்சாகப்படுத்தி அழைச்சி வந்து அவர் தயாரிக்க இருந்த ''நந்தகுமார்'' படத் திற்கு உடனிருந்து எல்லா வற்றையும் கவனிக்கும்படி சொன்னார். அந்தப் படத்துக்காக புனாவில் இருந்தபோது படத்திற்கு இசையமைப்பாளர் யாரென்று அங்கிருந்த வர்கள் கேட்டனர். ஏதோ யோசனையில் இருந்தபடி இவர்தான் இசையமைப் பாளர் என்று இவரைப் பிடித்து ஏவி.எம். தள்ளி விட்டுவிட்டார். அதிலிருந்து இவர் இசையமைப்பாளரானார்.

''மீரா'' படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களை அந்தக் காலத்திலேயே பயன்படுத் தியவராக்குமிவர். 15 தம்புரா, 4 வீணைகள், 15 வயலின்கள், தபலாதரங் இன்னும் எத்தனையோ வாத்தியங்கள். அத்தனையையும் ஒழுங்கு படுத்தி எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி பாட ஒரே ஒலிவாங்கியில் ஒலிப் பதிவு செய்தவர். இன்னொரு பாடலில் வேத மந்திர ஒலி, நாதஸ்வர இசை, பூஜை, பாட்டு பின்னணி இசை அத்தனையையும் இணைத்து ஒலிப்பதிவு செய்தவர்.

''மனோகரா'' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் இவரேதான் இசையமைத்தார். ஏ.பி.நாகராஜனின் ''கிருஷ்ண லீலா'' படத்திற்கு இசையமைத் தவரும் இவர் தான்.

சில படங்களில் இவர் இசையமைத்ததை இந்தி, ஆங்கிலப் படங்களில் கேட்டு இவரே ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

உதாரணமாக ''கண்கள்'' படத்தில் 'பிஸ்மில்லா இர் ரஹிமான்' பாடலை இசையமைத்து இவரே பாடியிருந்தார். சுரையா நடித்த படம் அப்புறம் வந்தது. அதைப்பார்த்து விட்டு வந்த இயக்குநர் பஞ்சுவின் நண்பர் ஒருவர் இவரது இசையமைப்புப் போலவே ஒரு பாடல் இருந்ததென்று கூறியுள்ளார். ஆனால் அதை இவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்தக் காலத்தில் அரை மணி நேரத்தில் இசையமைத்திருக்கிறார். ''இதய கீதம்'' படத்திற்காக ஒரு பாட்டை ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அரை மணி நேரம்தான் இருந்துள்ளது.அதற்குள் கவிஞர் கம்பதாசனை வரவழைத்து ''காதலை நம்பாதே நெஞ்சே'' என்ற ஒரு பாட்டை எழுதச் சொல்லி, இசையமைத்து டி.ஆர்.மகாலிங்கத்தைப் பாடவைத்து அரை மணி நேரத்தில் ஒலிப்பதிவும் செய்தவர்.

'எல்லோரும் நல்லவரே' என்று ''கிருஷ்ண பக்தி'' படத்தில் பி.யு.சின்னப்பா பாடிய பாடல் இவர் இசையமைத்ததுதான்.

இவரது காலத்தில் பதிவு செய்த பாடலைப் போட்டுக் கேட்க பதினைந்து நாட்களாகுமாம்.

தமிழ்தான் வேண்டுமென்று நாம் சொல்வது மாதிரி கர்நாடக இசையை முக்கியமாக வைத்துக் கொண்டுதான் இசையமைப்பது தான் இவரது பாணி.

ஹரிச்சந்திராவில் சந்திரமதியை விற்பதற்காக ஒரு பாட்டு இவர் போட்டிருந்தார். 'சத்திய நீதி மாறா இம் மாதை வாங்குவார் உண்டோ' என்ற பாடல், 'கண்ணகி' 'மகா மாயா' படங்களில் சில பாடல்கள், 'மனிதன்' படப்பாடல்கள்…… இப்படி சில பாடல்கள் இவருக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

இவர் இசையமைத்த ''மீரா'' படத்தின் பாடல்கள் மூன்று முறை இசைத்தட்டுக்கள் போட்டு விற்றிருக்கிறார்கள். 1978 –களிலும் எல்.பி.இசைத்தட்டாக வெளி வந்திருக்கிறது. அதே மாதிரி ''கிருஷ்ண பக்தி'' படத்தில் பி.யு.சின்னப்பா பாடிய காலட்சேபம் பல முறை இசைத்தட்டுக்களாக வந்து விற்றிருக்கின்றன.

1938 இல் துவங்கிய இவரது திரை வாழ்க்கை 1978 வரை நீடித்தது. 200-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அறிவாளி, மருத நாட்டு வீரன், ஒன்றே குலம், பானை பிடித்தவள் பாக்கியசாலி, இரும்புத் திரை, நன்னம்பிக்கை, கல்யாணம் செய்துக்கோ, கோடீஸ்வரன், கண்ணின் மணிகள், மாமன் மகள், பணக்காரி, கண்கள், லாவண்யா, சிங்காரி, வனசுந்தரி, லைலா மஜ்னு, பாரிஜாதம், ஸ்ரீ கிருஷ்ண விஜயம், ஞான சௌந்தரி, நவ ஜீவனம், சகுந்தலை முதலிய படங்கள் இவரது இசையமைப்பில் வெளி வந்த படங்களில் சில.

Updated On: 7 April 2022 5:11 AM GMT

Related News