/* */

குட்டி நயன்தாரா அனிகா: அச்சு அசலாய் நயன்தாரா போலவே

நயன்தாராவிற்கு மகளாக இரண்டு முறை நடித்த நடிகை அனிகா, லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படங்களில் அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கிறார்

HIGHLIGHTS

குட்டி நயன்தாரா அனிகா: அச்சு அசலாய் நயன்தாரா போலவே
X

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராகவும் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்.

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். கெளதம் மேனன் இயக்கியிருந்த அந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அதையடுத்து மிருதன், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார் அனிகா.

இவர் நடித்த 'மா' என்ற குறும்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த குறும்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது.


நயன்தாராவிற்கு மகளாக இரண்டு முறை நடித்தவர் நடிகை அனிகா. தமிழில் வெளிவந்த விஸ்வாசம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருப்பார். அஜித்தின் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அஜித்தின் ரீல் மகள் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது வளர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். மேலும் முன்னணி நடிகைகளே வியந்து பார்க்கும் அளவிற்கு பல போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில், சமீப காலமாக அனிகா வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அச்சு அசல் நயன்தாரா போலவே அனிகாவும் இருக்கிறார் என கூறுகின்றனர். அதை மீண்டும் ஒரு முறை அனிகா நிரூபித்துள்ளார்.


ஆம், அச்சு அசல் நயன்தாரா போல் உள்ள லுக்கில் அனிகா போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட்டின் புகைப்படங்களை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


அதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை குட்டி நயன்தாரா எனக் குறிப்பிடுகின்றனர்.

Updated On: 21 Jan 2023 6:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  2. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  3. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  4. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  5. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  6. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  7. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  8. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  9. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது