/* */

லிப்ட் கேட்ட அமிதாப்! டிராப் செய்த நபர்! நெகிழ்ச்சி பதிவு!

டிராபிக் காரணமாக படப்பிடிப்புக்கு லிப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன். வைரலாகி வரும் புகைப்படம்.

HIGHLIGHTS

லிப்ட் கேட்ட அமிதாப்! டிராப் செய்த நபர்! நெகிழ்ச்சி பதிவு!
X

டிராபிக் காரணமாக படப்பிடிப்புக்கு லிப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன். வைரலாகி வரும் புகைப்படம்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அமிதாப் பச்சன். இவரது படங்கள் உலகம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ளன. இத்தனை வயதிலும் ஓய்வின்றி சினிமாவில் நடித்து வருகிறார். மிகவும் கண்டிப்பான அமிதாப் பச்சன், நேரமேலாண்மையை சரியாக கடைபிடிப்பவராவார்.

சமீபத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல நேரம் ஆனதால் டிராபிக்கிலிருந்து தப்பிக்க ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றிருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பதில் அமிதாப் பச்சன் மிகுந்த கண்டிப்புடன் செயல்படுவாராம். வீட்டிலிருந்து தனது காரில் புறப்பட்டு சென்ற அமிதாப் பச்சன் இடையில் டிராபிக்கில் மாட்டிக்கொண்டுள்ளார். பல மணி நேரங்கள் அங்கு டிராபிக் ஆகும் சூழ்நிலையில், சற்றும் யோசிக்காமல் அங்கு வந்த ஒருவரை நிறுத்தி அவரிடன் தன்னை பைக்கில் கொண்டு செல்லமுடியுமா என்று கேட்டுள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு லிப்ட் கொடுக்க யாராவது தயங்குவார்களா என்ன? உடனடியாக ஒப்புக்கொண்ட அவர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு அவரை டிராப் செய்துவிட்டு சென்றாராம். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட அமிதாப் பச்சன் அவருக்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிவு இடப்பட்டுள்ளது.

ரைடுக்கு நன்றி நண்பரே. உங்களை எனக்கு முன்னர் தெரியாது. ஆனாலும் என்னை அழைத்துச் செல்ல நீங்கள் ஒப்புக் கொண்டு படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு வேகமாகவும் டிராபிக் சிக்னல்களைத் தவிர்த்தும் கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி சர்ட் அணிந்திருந்த உங்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 15 May 2023 8:56 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...