/* */

அஜித் - விஜய்க்கு ஒன்றாக 'கட்-அவுட்' பேனர் வைத்த ரசிகர்கள்

Vijay Banner- புதுச்சேரியில், தல - தளபதி என, அஜித், விஜய்க்கு ஒன்றாக ‘கட்-அவுட்’ பேனர் வைத்து, ரசிகர்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

அஜித் - விஜய்க்கு ஒன்றாக கட்-அவுட் பேனர் வைத்த ரசிகர்கள்
X

ajith vijay banner goes viral- நடிகர்கள் விஜய், அஜித்.

Vijay Banner- வரும் பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரும் நேரடியாக மோத போகிறார்கள் என்பதால் தற்போது எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

கடந்தாண்டில், அஜித் நடிப்பில் 'வலிமை' படம் வெளியானது. பைக் ரேஸ் திருடர்களின் நகை பறிப்பு குற்றங்களை தடுத்து, போதை கும்பல் அட்டூழியத்தை அழிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருப்பார். இதில் அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் இருந்ததால், படம் வெற்றி பெற்றது.


விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கோலமாவு கோகிலா, டாக்டர் என, வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் படம் என்பதால், ரசிகர்களின் மத்தியில் அதீத ஆர்வம் இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு, திருப்தி தரவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் இயக்குநர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக, அஜித் - விஜய் ரசிகர்களிடையே ஒருவித ஈகோ பிரச்னை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. அஜீத் - விஜய் நண்பர்களாக இருந்தும், அவர்களது ரசிகர்கள் எப்போதும் எதிரெதிராக நிற்பதே வழக்கமாக உள்ளது. மேலும் ட்விட்டரில் எங்கு பார்த்தாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மோதல் தான் நடந்து கொண்டிருக்கிறது.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை ஒருபக்கம் இருக்க, தற்போது புதுச்சேரியில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மிகவும் ஒற்றுமையுடன் வைத்திருக்கும் ஒரு பேனர் தற்போது வைரலாகி வருகிறது.


அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இருப்பது போல அந்த பேனர் வடிவமைத்து இருக்கின்றனர். புதுச்சேரியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரு படங்கள் வெற்றியடைய 25 அடி உயரத்தில் பேனர் வைத்துள்ளனர்.


இதில், 'தல - தளபதி' பைக்கின் முகப்பில், நெம்பர் பிளேட்டில் எழுதிய நிலையில், பைக்கை முன்னால் அமர்ந்து அஜித் ஓட்டுவது போலவும், பின்னால் சிரித்தபடி விஜய் அமர்ந்து வருவது போலவும் கட்அவுட் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிற நிலையில், புதுச்சேரியில் இருதரப்பு ரசிகர்களும் இப்படி ஒற்றுமையாக விஜய் - அஜித்துக்கு பேனர் வைத்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


நடிகர்கள் ஒற்றுமையாக உள்ள நிலையில், ரசிகர்கள் இப்படி இரண்டு தரப்புகளாக பிரிந்து நிற்பது அவசியமற்றது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த பேனர் உள்ளது. சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை. பல லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் ஒரு தொழில் மையம். இதில், நடிகர்கள் ரசிகர்களை மகிழ்விக்கவே நடிக்கின்றனர். இதை படத்தை ரசிக்கும் ரசிகர்களாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, யார் சிறந்தவர், பெரியவர் என, தங்களுக்கு பிடித்த நடிகர்களை உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியமில்லை என, இந்த கட்-அவுட் புகைப்படங்களை பார்க்கும் பலர், சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 April 2024 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?