/* */

2023 பொங்கலில் மோதிக்கொள்ளும் அஜித் - விஜய்..! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்..!

Ajith vs Vijay Movie Clash -2023ம் ஆண்டு பொங்கல் பட ரிலீஸில் அஜித் மற்றும் விஜய் படங்கள் மோதிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

Ajith vs Vijay Movie Clash
X

Ajith vs Vijay Movie Clash 2023-நடிகர்கள் அஜித் மற்றும்  விஜய் 

Ajith vs Vijay Movie Clash 2023-நடிகர் தல அஜித், தளபதி விஜய் ஆகியோர் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. ஆனால் மார்க்கெட்டில் இருவரும் மோதிக்கொண்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

ரஜினி-கமல் ஜோடிக்குப் பின்னர் திரையுலகில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் இளைய தலைமுறைக்கு போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். தற்போது, ​​இந்த நட்சத்திரங்கள் விரைவில் பாக்ஸ் ஆபீசில் மோதிக்கொள்ள உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு பொங்கலின் போது 'வீரம்' மற்றும் 'ஜில்லா' ஒரே தேதியில் ரிலீசானது. இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்தன. ஆதாரங்களின்படி, 2014ல் ரிலீசான மாதிரியே அஜீத்-ன் 'AK61' மற்றும் விஜய் நடித்த தளபதி விஜய் நடித்துவரும் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களும் 2023ம் ஆண்டு பொங்கலின் போது ரிலீசாக உள்ளதாக தெரிய வருகிறது.

தளபதி விஜய்-ன் 'வாரிசு' திரைப்படம் 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தது அறிந்ததே. உண்மையில் 2022 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தஅஜித்-ன் 'AK61' திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது. படப்பிடிப்பை முடிக்க காலதாமதம் ஆனதால் தள்ளிவைக்கப்பட்டது.

'அஜித் 61' படத்தை பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர். அதற்கு இடைப்பட்ட காலங்களில் சரியான தேதி கிடைக்காததால், 'AK61' தயாரிப்பாளர்கள் படத்தை 2023 ஜனவரி மாதத்தில் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனாலும் இது இறுதி முடிவல்ல. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 'அஜித் 61' படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

Updated On: 12 July 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...