/* */

ஷங்கர் பட நாயகி கியாராவுக்கு விரைவில் திருமணமா?

தனது கவர்ச்சியான நடிப்பால், இளசுகளின் மனங்களை அள்ளியவர் நடிகை கியாரா அத்வானி. இவருக்கும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

ஷங்கர் பட நாயகி கியாராவுக்கு விரைவில் திருமணமா?
X

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி

கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலர்களாக, ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகி, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியானது.

ஆனால் இதுபோன்ற வதந்திகளை பொய்யாக்கும் விதமாக, கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா, துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. காதலர்களான இருவரும் அடுத்து, திருமண வாழ்க்கையில் இணைய உள்ளனர். இருவீட்டாரும் திருமண பேச்சை தொடங்கிய நிலையில், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கியாரா அத்வானி, ராம் சரண் ஜோடியாக ஷங்கர் டைரக்ட் செய்து வரும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Updated On: 5 Aug 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...