/* */

நடிகர் ரஜினிகாந்தை அதிர்ச்சி அடைய வைத்த நண்பர் வி.எம். சுதாகர் மரணம்

தனது நண்பர் வி.எம். சுதாகர் மரணம் அடைந்து விட்டதால் நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சியாகி உள்ளார்.

HIGHLIGHTS

நடிகர் ரஜினிகாந்தை அதிர்ச்சி அடைய வைத்த நண்பர் வி.எம். சுதாகர் மரணம்
X

நடிகர் ரஜினிகாந்துடன் அவரது நண்பர் வி.எம். சுதாகர் (கோப்பு படம்)

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியுமான வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரது மரண செய்தியால் நடிகர் ரஜினி காந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பர் வி.எம்.சுதாகர். ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அடுத்த ஆண்டு வி. எம். சுதாகர் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இருந்தே நடிகர் ரஜினிகாந்த் வி.எம். சுதாகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

திரைப்பட கல்லூரியை விட்டு வெளியேறி புதுமுக நடிகராக, வில்லனாக நடித்த போதும், பின்னர் நடிகர் ரஜினிகாந்த் புகழ் பெற்ற நடிகராக மாறிய போதும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக செயல்பட்ட சத்தியநாராயணா மாற்றப்பட்டபோது வி.எம்.சுதாகரை அழைத்து தன்னுடைய ரசிகர் மன்றத்தை பார்த்துக் கொள்ள கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக வி.எம். சுதாகர் செயல்பட்டு வந்தார். மேலும் ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்ட போதும் அதன் தலைமை நிர்வாகியாக வி.எம். சுதாகர் செயல்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக அவருக்கு கிட்னி கோளாறு பிரச்சனை இருந்து வந்தது. அதற்கான செலவை ரஜினிகாந்த் ஏற்றிருந்தார். இந்த நிலையில் வி.எம் சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். 71 வயதாகும் வி.எம்.சுதாகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுதாகர் மறைவு நடிகர் ரஜினிகாந்தை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

வி.எம். சுதாகர் சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் எந்த நிதி உதவியும் செய்யவில்லை என செய்தி பரவியது. இதற்கு வி.எம்.சுதாகர் மறுப்பு தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அதில் உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று சுதாகர் அப்போது ட்வீட்டரில் கூறியிருந்தார். இந்த பதிவின் மூலம் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் தான் தற்போது சுதாகர் மரணத்தை தழுவி இருக்கிறார்.

வி.எம். சுதாகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் 'என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 6 Jan 2023 7:37 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!