நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

நடிகர் அஜித் குமார் தந்தை சுப்ரமணியம் கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில், இன்று அதிகாலை காலமானார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்
X

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவருடைய தந்தை சுப்பிரமணியம், தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமாரின் தந்தை உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

Updated On: 25 March 2023 5:42 AM GMT

Related News