/* */

கடன்செலுத்திய 30 நாட்களில் அசல் ஆவணங்கள் திருப்பி அளிக்கவேண்டும்: ரிசர்வ் வங்கி

கடன்தாரருக்கு 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களை திருப்பி அளிக்காவிட்டால் வங்கிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

கடன்செலுத்திய 30 நாட்களில் அசல் ஆவணங்கள் திருப்பி அளிக்கவேண்டும்: ரிசர்வ் வங்கி
X

ரிசர்வ் வங்கி செய்திக்கான மாதிரி படம் 

கடனை முழுவதுமாக திருப்பி செலுத்திய 30 நாட்களுக்குள் சொத்து தொடர்பாக அசல் ஆவணங்களை ஒப்படைக்காவிடில், வாடிக்கையாளருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டுமென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனிநபர் கடன்களில் வீட்டுக்கடன், கார் கடன் அல்லது தங்க நகை கடன் போன்ற பிணையத்தை உள்ளடக்கிய அனைத்து கடன்களும் இதில் அடங்கும்.

அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை அளிப்பதில் உள்ள சீரற்ற நடைமுறைகள், வாடிக்கையாளர் புகார்கள், மோதல்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடன் பெறுவோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கீழ்க்கண்ட வழிமுறைகள் வெளியிடப்படுகிறது.

1. காலக்கெடு :

கடன் கணக்கு முழுமையாக செலுத்தப்பட்ட அல்லது செட்டில் செய்யப்பட்ட பின்னர், வங்கிகள் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்து அசையும், அசையா சொத்து ஆவணங்கள், பதிவு அலுவலகங்களில் பதியப்பட்ட எந்தவொரு மதிப்பிலான ஆவணங்களுக்கு வாடிக்கையாளருக்கு 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்.

2. கிளையை தேர்வு செய்ய வாய்ப்பு:

கடன் வாங்கிய நபருக்கு, அசல் அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களை கடன் கணக்கு வைத்துள்ள கிளை அல்லது ஆவணங்கள் கிடைக்க கூடிய வங்கி அல்லது கடன் வழங்கும் நிறுவனத்தின் எந்தவொரு கிளையை தேர்வு செய்ய முன்னுரிமை வழங்க வேண்டும்.

3. அனுமதி கடிதம் :

நடைமுறைக்கு வரும் தேதி அல்லது அதற்குப் பிறகு வழங்கப்படும் கடன் அனுமதி கடிதங்களில் அசல் அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களைத் திருப்பித் தருவதற்கான அட்டவணை மற்றும் இடம் பற்றிய தகவல்கள் இடம்பெற வேண்டும்.

4. கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் :

தனியாக அல்லது கூட்டாகவோ கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், அசல் அசையும் மற்றும் அசையாச் சொத்து ஆவணங்களை சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் திருப்பித் தருவதற்கான தெளிவான அமைப்பை கடன் வழங்கும் நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் தகவல் தொடர்பான பிற தொடர்புடைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்,கடன் வழங்கும் நிறுவனங்களின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

5. தாமதத்திற்கு அபராதம் :

கடனைத் திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அல்லது அசையாச் சொத்தின் அசல் ஆவணங்கள் திருப்பி அளிக்கப்படாவிட்டால் அல்லது அதற்கான கட்டண திருப்திப் படிவத்தை உரிய பதிவாளரிடம் சமர்ப்பிக்காதபோது, கடனாளிக்கு தாமதத்தை நிறுவனங்கள் விளக்க வேண்டும்.

தாமதத்திற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் காரணம் என்றால், தாமதம் நீடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் கடனாளிக்கு ரூ. 5,000 செலுத்துவதன் மூலம் வித்தியாசத்தை ஈடுசெய்ய வேண்டும்.

6. இழப்பு ஏற்படுத்தினால் அபராதம் :

அசல் சொத்து ஆவணங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், நாளொன்றுக்கு ரூ. 5000 என இழப்பீடு வழங்குவதோடு, பகுதி அல்லது முழுமையாகவோ இழந்த அல்லது சேதமடைந்த ஏதேனும் அசல் அசையும் அல்லது அசையாச் சொத்து ஆவணங்களின் நகல்/சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வாங்கியவருக்கு உதவும்.

தாமதமான அபராதம் தீர்மானிக்கப்படுவதற்கு முன்பு, இந்த செயல்முறையை முடிக்க, கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதலாக 30 நாட்கள் (மொத்தம் 60 நாட்கள் ) வழங்கப்படும்.

Updated On: 14 Sep 2023 5:39 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...