/* */

வேலூரில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் தந்தை, மகள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

வேலூரில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் தந்தை, மகள் உயிரிழப்பு
X

வெடித்து சிதறிய எலெக்ட்ரிக் பைக்

வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்தில் சிக்கி கேபிள் ஆபரேட்டர் மற்றும் அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பைக் பேட்டரி வெடித்து சிதறியதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க போராடிய தந்தை துரை வர்மா( 49) மற்றும் அவரது மகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 26 March 2022 9:45 AM GMT

Related News