/* */

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தண்ணீரின்றி நோயாளிகள் பாதிப்பு

Water Problem At Tirupur Govt.Hospital கோடைக்காலம் துவங்கிய நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தண்ணீர் இன்றி நோயாளிகள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

HIGHLIGHTS

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தண்ணீரின்றி நோயாளிகள் பாதிப்பு
X

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் அடுத்தபடம் 4வது மாடியில் உள்ள கழிவரையில் தண்ணீர் வராமல் வறண்டு கிடக்கிறது.

Water Problem At Tirupur Govt.Hospital

தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டது என்றே கூட சொல்லலாம். அந்த அளவிற்கு கடந்த மாதம் முதலே வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் கோடைக்காலம் என்றால் தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும். ஆனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தண்ணீரா?...அப்படி என்றால் என்று கேட்கும் நிலையே தொடர்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி ஆஸ்பத்திரியில் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியும்... குடிதண்ணீரும் இல்லை உப்பு தண்ணீரும் இல்லை... அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து சரிசெய்வார்களா?....

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர் இது தவிர 1000க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் குடிப்பதற்கு கூட குடிதண்ணீர் இல்லை எனவும் குற்றம் சாட்டிய நோயாளிகள் இது குறித்து பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

இது குறித்து மருத்துவமனை டீன் முருகேசன் இடம் கேட்டபோது தண்ணீர் குழாயில் சிறு குறைபாடு ஏற்பட்டுள்ளது அதை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.

Updated On: 2 March 2024 5:39 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!