/* */

தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம் மனு அளித்த பல்லடம் கோழிப் பண்ணையாளா்கள்

Tirupur News-தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம் பல்லடம் கோழிப் பண்ணையாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

HIGHLIGHTS

தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம் மனு அளித்த பல்லடம் கோழிப் பண்ணையாளா்கள்
X

Tirupur News- பல்லடம் பிராய்லா் கோழிப் பண்ணை உற்பத்தியாளா்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பங்கேற்றார்.

Tirupur News,Tirupur News Today- தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம் பல்லடம் கோழிப் பண்ணையாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

பல்லடம் பிராய்லா் கோழிப் பண்ணை உற்பத்தியாளா்கள் குழு ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம், பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட குஞ்சு பொரிப்பகங்கள் மற்றும் 40,000 எண்ணிக்கையிலான பிராய்லா் பண்ணைகள் உள்ளன. தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் முதல் 12 லட்சம் குஞ்சுகள் பொரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சோளத்தில் 50 சதவீதமும், சோயாவில் 40 சதவீதமும் கோழி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூா் பகுதிகளில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தியும், நாமக்கல் மற்றும் சேலத்தில் முட்டை உற்பத்தியும் செய்யப்படுகிறது.

கோழித் தீவன உற்பத்திக்கு அதிக அளவில் சோயாபீன்ஸ் தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் சோயாபீன் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது.

சோயாபீன் சாகுபடியை மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஐஐஎஸ்ஆா் (இந்திய சோயாபீன் ஆராய்ச்சி நிறுவனம்) மூலம் விவசாயிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சோயா சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகளை வழங்க வேண்டும்.

ஐ.ஐ.எஸ்.ஆா். மூலம் விதை உற்பத்தி, தரப்படுத்துதல் மற்றும் சான்றிதழுடன் விநியோகிக்க வேண்டும். ஐ.ஐ.எஸ்.ஆா். மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் கோவையில் ஆராய்ச்சி, கள ஆய்வுகள் மற்றும் விவசாயிகளுக்கு சேவை வழங்க ஒரு மையத்தை அமைக்க வேண்டும்.

சோயாபீன் மற்றும் மக்காச்சோளம் சாகுபடியை மேம்படுத்த ஆலோசனை, சேவைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கிருஷி அறிவியல் மையங்கள் மூலம் பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் நல்ல விலைக்கு மக்காச்சோளத்தை கொள்முதல் செய்யும் முழு உத்தரவாதத்தை நாங்கள் அளிக்க முடியும். இந்த திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மக்காச்சோள விற்பனைக்கு விதிக்கப்படும் 1 சதவீத செஸ் வரியை மாநில அரசு நீக்க வேண்டும்.

கோழிப் பண்ணைகளுக்கும் மின் கட்டண மானியம் வழங்க வேண்டும். தற்போது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோழி வளா்ப்புத் துறைக்கு கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. எனவே விதிமுறைகளை தளா்த்தி குறு, சிறு விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சோயாவுக்கு விதிக்கப்படும் 5 ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

Updated On: 9 April 2024 9:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!