/* */

வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு பாராட்டு

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தது.

HIGHLIGHTS

வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு பாராட்டு
X

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தது.

வெள்ளக்கோவில் நகராட்சியில் 48 டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் நகராட்சியின் 21 வாா்டுகளிலும் பொதுஇடங்கள், குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலைகளில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வது, தண்ணீா் தொட்டிகளில் லாா்வா கொசுப்புழு தடுப்பு திரவ மருந்து ஊற்றுவது உள்ளிட்ட தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் நகராட்சி சாா்பில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு தீவிர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் தாங்களாகவே உதவ முன்வந்தனா்.

தொழில் வரி, வீட்டு வரி, வணிக வரியினங்களை சிரத்தையுடன் வசூல் செய்து கொடுத்ததுடன், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நகராட்சி நிா்வாகத்துக்கு உதவிய டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் அனைவருக்கும் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகா் மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா் ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், மேற்பாா்வையாளா் பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

Updated On: 10 Feb 2024 6:09 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!