/* */

ரசிகரின் கைவண்ணத்தில் 'ஜெயிலர்' கெட்டப்பில் விநாயகர் சிலை

உடுமலையை சேர்ந்த மண்பாண்ட கலைஞர், ரஜினி நடிப்பில் வெளிவர உள்ள ‘ஜெயிலர்’ கெட்டப்பில், விநாயகர் சிலையை வடிவமைத்து, பலரது கவனத்தை ஈர்த்துள்ளா்.

HIGHLIGHTS

ரசிகரின் கைவண்ணத்தில் ஜெயிலர் கெட்டப்பில் விநாயகர் சிலை
X

‘ஜெயிலர்’ கெட்டப்பில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27). மண்பாண்டக் கலைஞரான இவர் மண்பாண்டங்கள் மட்டுமல்லாமல், தெய்வங்கள் மற்றும் கால்நடைகள் என அனைத்து விதமான உருவ பொம்மைகளையும் செய்து வருகிறார்.

தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பெயரையே, ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் உருவ பொம்மையை செய்த இவர், அதனை ரஜினியிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் 'பர்ஸ்ட் லுக்'கில் உள்ள ரஜினியின் தோற்றத்தில் விநாயகர் உருவ பொம்மையை செய்து அசத்தியுள்ளார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து ரஞ்சித் கூறுகையில் "இந்த ஜெயிலர் விநாயகரை 1½ அடி உயரத்தில் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தேன். மேலும் தலைவரின் தாய், தந்தையின் மார்பளவு போட்டோ ஒன்று கிடைத்தது. அதனை வைத்து அவர்களின் முழு உருவச்சிலையை செய்து வைத்துள்ளேன். அதனை தலைவரை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

Updated On: 1 Sep 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!