/* */

அரியர்ஸ் தேர்வு: மீண்டும் எழுத எதிர்ப்பு -மாணவர்கள் சாலை மறியல்

அரியர்ஸ் தேர்வு: மீண்டும் எழுத எதிர்ப்பு -மாணவர்கள் சாலை மறியல்
X

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி கரியம்பட்டி பகுதியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் பேசியதாவது,

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் காரணமாகவும் கல்லுாரி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்பின் தேர்வு கட்டணமும் ரத்து செய்தது. இந்நிலையில் கல்லுாரி நிர்வாகம் தற்போது மீண்டும் அரியர்ஸ் தேர்வுகள் எழுத கட்டாயம் கட்டணம் கட்ட வேண்டும் இல்லையெனில் தேர்வு எழுத அனுமதி இல்லை என கூறுகிறது. ஆனால் நாங்கள் ஏற்கனவே அரியர்ஸ் கட்டணம் காட்டியுள்ளோம். இப்படி இருக்கையில் மீண்டும் எங்களை கட்டணம் கட்ட சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கூறி திருப்பத்தூர் டூ பர்கூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கந்திலி போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் திருவள்ளூர் அரசு கல்லுாரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.‌

Updated On: 14 Feb 2021 6:19 PM GMT

Related News