Begin typing your search above and press return to search.
ஆம்பூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.29 லட்சம் பறிமுதல்
ஆம்பூரில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் பறிமுதல் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
HIGHLIGHTS

ஆம்பூரில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 1 லட்சத்து 29 ஆயிரம் பறிமுதல் செய்து, நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நகரப்புற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது, அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், பணம் பட்டுவாடாவை கட்டுப்படுத்தும் வகையில், நகர்ப்புற பகுதிகளில் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில், வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்களின்றி, சத்தியமூர்த்தி என்பவர், காரில் கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தொகை, ஆம்பூர் நகராட்சி உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்.