/* */

மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 2021 -22 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெறலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
X

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

இது தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ மாணவிகளிடம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2021 -22 ஆம் ஆண்டிற்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15. 12 .2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Dec 2021 3:00 AM GMT

Related News