/* */

' எல்லாரும் ஓட்டு போடுங்க ' கோலம் போட்டு விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி நூறு சதவீதம் ஓட்டுப் போட மகளிர் திட்டத்தின் சார்பில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

தேர்தலையொட்டி நூறு சதவீதம் ஓட்டுப் போட மகளிர் திட்டத்தின் சார்பில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாக்தில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் ஸ்மார்ட் டிவி பொருத்தப்பட்ட வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியையும், மகளிர் திட்டத்தின் சார்பில் வண்ணக்கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சிகளையும் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை.இதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் வாக்குகளை பரிசு பொருட்களுக்கும், ரொக்கத்திற்கும் விற்க கூடாது. வாக்களிப்பது நமது உரிமை என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இம்முறை அதிக வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஸ்மார்ட் திரை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் வாக்களிப்பில் முழுமையான பங்கேற்பு குறித்த செய்திமலரினை கலெக்டர் .சாந்தா தொடங்கி வைத்தார்.

மேலும், மகளிர் திட்ட அலுவலத்தின் மூலம் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக வண்ணக்கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும் பார்வையிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு - கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மகளிர் திட்ட இயக்குநர் .ஸ்ரீலேகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .புண்ணியகோட்டி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, வட்டாட்சியர் (தேர்தல்) .திருமால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 5 March 2021 11:30 AM GMT

Related News