/* */

திருவாரூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்- கலெக்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி  முகாம்- கலெக்டர்  ஆய்வு
X

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைபளை மேற்கொண்டு வருகிறது.அந்தவகையில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் 40 ஆயிரம் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று காலை தொடங்கியது. திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ்நிலையம், முதலியார்தெரு, பழைய பஸ் நிலையம், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட புலிவலம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட மூலங்குடி, குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன். நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தற்பொழுது நிலவும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இவ்வாய்வில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்.பாலசந்திரன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Sep 2021 10:44 AM GMT

Related News