/* */

ஆலங்குடி குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா முன்னேற்பாடு தொடர்பான கூட்டம்

ஆலங்குடி கோயிலில் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி இலட்சார்ச்சனை விழா முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆலங்குடி குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா முன்னேற்பாடு தொடர்பான கூட்டம்
X

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குருபெயர்ச்சி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் கலெக்டர் தலைமையில் நடந்தது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை விழாவானது 18.04.2022 முதல் 22.04.2022 முடிய நடைபெறவுள்ளது.

குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு 22.04.2022 முடிய ஒவ்வொரு நாளும் காவல் துறையின் பாதுகாப்பும், குருபெயர்ச்சி 14.04.2022 அன்று இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதால் அவர்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்யவும், மேற்படி தினத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் களவு மற்றும் திருட்டு நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவும், உரிய காவலர்களை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இத்திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் குருபெயர்ச்சியன்று எந்த இடத்திலும் தங்கு தடையின்றி சென்று வருவதற்கு காவல்துறையினரால் அனுமதி அளித்தல் உள்ளிட்ட பணிகள் காவல்துறைக்கும், குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு தீயணைப்பு வண்டி ஒன்று ஏற்பாடு செய்து திருக்கோயில் பிரகாரத்தில் நிலைநிறுத்தி தீயணைப்பு பாதுகாப்பு மேற்கொள்ள ஏற்பாடு செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் தீயணைப்புத்துறைக்கும், விழா நாட்களில் குறிப்பாக 22.04.2022 முடிய திருக்கோவிலுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க முழு ஏற்பாடு செய்ய மின்சார வாரியத்திற்கும், குருபெயர்ச்சி நாட்களான 13.04.2022 முதல் 17.04.2022 வரை அரசு மருத்துவமனையில் இரவு, பகல் முழுவதும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க ஏற்பாடு செய்தல், மேற்படி விழாவினை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு இரண்டு தேவையான மருந்துகளுடன் வந்து உதவுமாறு சுகாதாரத்துறைக்கும், திருவாரூர், நாகப்பட்டினம், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பிச் செல்ல போதுமான சிறப்பு பேருந்து வசதி செய்துக்கொடுக்க ஏற்பாடு செய்தல், பேருந்துகளில் குருபெயர்ச்சி விழா விளம்பரத்தை ஒட்டவும், அதனை பத்து தினங்கள் நிரந்தரமாக இருக்கவும், பாதுகாக்கவும் தொடர்புடைய நிலைய மேலாளர்களுக்கு அறிவுறுத்துதல் உள்ளிட்ட பணிகள் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், குருபெயர்ச்சி தினமான 14.04.2022 அன்று பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி கொடுக்க ஏற்பாடு செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் வருவாய் துறையினருக்கும், குருபெயர்ச்சி தினத்தன்று தினசரி குடிநீர் வசதியும், தெரு விளக்குகள் ஒழுங்காக எரியவும் மற்றும் தற்காலிக கழிவறைகள் கட்டித்தரவும் தக்க ஏற்பாடுகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது என முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் ஹரிஹரன், வட்டாட்சியர் சந்தானம், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2022 12:35 PM GMT

Related News