/* */

வாலாஜாபேட்டை ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க மக்கள் கூட்டம்

வாலாஜாபேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொருட்களை வாங்க கூட்டமாக பொதுமக்கள் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாலாஜாபேட்டை ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க மக்கள் கூட்டம்
X

சமூக இடைவெளியில்லாமல் மக்கள் கூட்டம் (மாதிரி படம்)

வாலாஜாபேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரானா 2வது அலை பொதுமக்களை தாக்கி வருகிறது தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை ,ஆக்ஸிஜன் மற்றம் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறைகள் காரணமாக சிகிச்சையளிக்க முடியாமல் கொரானா நோயாளிகளின் இறப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரானா பரவலைத்தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதற்கட்டமாக பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து 3அடி முதல் 6அடி வரை சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அடிக்கடி கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், நோய் தொற்றிலிருந்து விடுபட இதுவே சிறந்த வழி என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. மேலும் நோய்த்தொற்றை தடுக்க மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் கடந்த வாரம் முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இருப்பினும் ரேஷன்கடைகள் தினமும் காலை 8 மணி முதல்12 மணிவரை செயல் பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை கச்சாலத் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் கொரானா குறித்த எந்த வித பயமின்றி ரேஷன் பொருட்களை வாங்க கூட்டமாக நின்றனர். இப்படி கூட்டமாக நிற்க கூடாது என்று அறிவுறுத்தியும் மக்கள் அலட்சியமாக இருப்பது சரியல்ல. கொரோனா விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல் மற்றும் சமுக இடைவெளியின்றி நிற்பவர்கள் மீதும் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதே போல கொரானா விதிகளை மீறி வருபவர்களுக்கு பொருட்களை வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட வேண்டும். அவற்றை மீறி பொருட்களை வழங்கினால் அப்பகுதி கற்பகம் கூட்டுறவு நியாய விலைக்கடை விற்பனையாளர் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 28 May 2021 5:31 AM GMT

Related News