/* */

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கை

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்றவேண்டும் என பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கரும்பு விவசாயிகள் கோரிக்கை
X

பெரம்பலூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் (பெரம்பலூர் சர்க்கரை ஆலை) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகள் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை உடனே துவங்கிட வேண்டும்,மத்திய அரசு எப். ஆர். பி. குறைந்த பட்ச ஆதார விலை, மாநில எஸ்.ஏ.பி. விலையும், தேர்தல் வாக்குறுதிபடி டன் 1க்கு ரூ 4000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் இளையராஜா விநாயகம், துரைசாமி, ராஜேந்திரன், ராமலிங்கம் ,ராமசாமி ,மாணிக்கம் ,வரதராஜன், செல்லதுரை ,ராஜா சிதம்பரம் ,அன்பழகன் ,சீனிவாசன் ,ஞானசேகரன் ,ராமலிங்கம் ,முருகேசன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 11:15 AM GMT

Related News