/* */

மார்க்சிஸ்ட் திண்டுக்கல் மாவட்ட மாநாடு வேடசந்தூரில் இன்று துவக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு வேடசந்தூரில் இன்றும், நாளையும் நடக்கிறது.

HIGHLIGHTS

மார்க்சிஸ்ட் திண்டுக்கல் மாவட்ட மாநாடு வேடசந்தூரில் இன்று துவக்கம்
X

சிபிஎம் மாவட்ட மாநாட்டு தொடர்பான ஜோதி, கொடிப்பயணம், திண்டுக்கலில் புறப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு, வேடசந்தூரில் எம்.பி. மகாலில் (இன்றும், நாளையும் )செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர்கள் காமராஜ், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிரதானந்தம், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இன்று காலை 8 மணி அளவில் செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெறுகிறது. இதனையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பாக நினைவு ஜோதி மற்றும் கொடிப்பயணம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. வின்சென்ட், ஜேம்ஸ், சிவராஜ், நாகம்மாள், சாந்தாம்மாள், ஆண்டாள் ஆகியோர் நினைவு ஜோதியை, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வ.கல்யாணசுந்தரம் எடுத்துக் கொடுக்க, திண்டுக்கல் நகர்க்குழு உறுப்பினர் விஷ்ணுவர்த்தன் பெற்றுக்கொண்டார்.

தோழர் முத்துராஜ் நினைவு கொடியை, மாவட்டக்குழு உறுப்பினர் என்.காந்தி எடுத்துககொடுக்க போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் வெங்கிடுசாமி பெற்றுக்ப்கொண்டார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி திண்டுக்கல் மாவட்;டத்தில் நிலவும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Updated On: 28 Dec 2021 1:55 AM GMT

Related News