/* */

கோபால்பட்டி அருகே வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு

தண்ணீர் தேங்கியுள்ள டயர்கள் , தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தினர்

HIGHLIGHTS

கோபால்பட்டி அருகே வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு
X

 நத்தம் அருகே கோபால்பட்டி அருகே வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியில் சுகாதார களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோபால்பட்டி அருகே வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியில் சுகாதார களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே கோம்பைபட்டி ஊராட்சி அய்யாபட்டியில் கடந்த ஆண்டு சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது . இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசுஒழிப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். அதில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள டயர்கள் , தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். மேலும் பரிசோதனைக் கருவி மூலம் டெங்கு கொசு புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்தனர் . கோபால்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் அன்பரசு டெங்கு கொசு புழுக்கள் உள்ள தொட்டிகளில் அபேட் டெங்கு கொசு ஒழிப்பு மருந்தை ஊற்றினார்.

Updated On: 22 Dec 2021 3:24 AM GMT

Related News