/* */

கடலூர்:காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் திட்டம் நேரலையாக திரையிடப்பட்டது

காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டம்- பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.-கடலூரில் பாஜக சார்பில் சிவாலயம் முன்பு நேரலை

HIGHLIGHTS

கடலூர்:காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் திட்டம் நேரலையாக திரையிடப்பட்டது
X

பாரதிய ஜனதா கட்சி கடலூர் நகரம் சார்பில்,  கடலூர் பாடலீஸ்வரர் கோயில் முன்பு காணொலி காட்சி மூலம் பிரதமரின் வாரணாசி வழிபாடு திரையிடப்பட்டது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு,கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் காசி கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார்.திறப்பு விழாவுக்கு முன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுடன் உரையாடிய மோடி, அவர்களின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி தமிழகத்திலுள்ள பல சிவாலயங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி கடலூர் நகரம் சார்பில் கடலூர் பாடலீஸ்வரர் கோயில் முன்பு காணொலி காட்சி மூலம் திரையிடப்பட்டது. இதில் கடலூரில் மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் மற்றும் மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2021 1:56 AM GMT

Related News