சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: சென்னை காவல் துறை

சென்னையில் வரும் 16, 18, 19 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: சென்னை காவல் துறை
X

பைல் படம்.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 16,18 மற்றும் 19-ம் தேதிகளில் ஒத்திகை நடைபெற இருக்கிறது. ஆகவே அந்த 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,

1.சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு ,அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம்.

2. சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பால் நகர் பிரதான சாலை மற்றும் பி .எஸ் .சிவசாமி சாலை, ராயபேட்டை மெயின் ரோடு இடது புறம் திரும்பி ராதா கிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.

3. கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கு செல்லலாம்.

4. டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை கலங்கரை விளக்கம் எம்.ஆர்.டி.எஸ் அருகில் இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை சர்வீஸ் ரோடு வழியாக காமராஜர் சாலைக்கும் , கடற்கரை சாலை சர்வீஸ் ரோடு வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On: 2021-10-15T17:04:20+05:30

Related News

Latest News

 1. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 2. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 3. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 4. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 5. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 6. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 7. ஸ்ரீரங்கம்
  திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
 8. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
 10. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...