/* */

தோல்வியை முன்கூட்டியே அறிந்து காெண்டு எஸ்பி.வேலுமணி நாடகம் - அமைச்சர் சேகர்பாபு

தேர்தல் தோல்வியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு எஸ் பி வேலுமணி நாடகமாடுகிறார் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.

HIGHLIGHTS

தோல்வியை முன்கூட்டியே அறிந்து காெண்டு எஸ்பி.வேலுமணி நாடகம் - அமைச்சர் சேகர்பாபு
X

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு காரணம் தேடவே எஸ் பி வேலுமணி போராட்டம் நடத்தியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் குடும்பத்தினருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும், மக்கள் நலனுக்காக பல்வேறு சலுகைகளை போராடி பெற்று தந்தவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக முதலமைச்சர் மாற்றுவார் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது எனவே, சென்னையில் உள்ள 200 வட்டங்களையும் திமுக கைப்பற்றும் என உறுதியாக தெரிவித்தார்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி போராட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தோல்வி ஜுரம் வந்து விட்டால் இதுபோன்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது வாடிக்கை. கொங்கு மண்டலமும் திமுகவின் கோட்டை ஆக மாறி இருப்பதை இது வெளிக்காட்டுவதாக தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வைத்தால் தேர்தல் தோல்விக்கு அதை காரணமாக காட்டி விடலாம் என்பதற்காக எஸ்.பி.வேலுமணி போராட்டம் நடத்தியதாக அவர் தெரிவித்தார். கொரோனா காலம் பொருளாதார நெருக்கடி, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டது, 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது, மக்கள் துயர் அடையும்போது களத்திற்கு ஓடோடி வந்து பணியாற்றுவது உள்ளிட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் செய்து வருவதால், அவற்றுக்கு அங்கிகாரம் வழங்க திமுகவிற்கு வெற்றி வழங்க மக்கள் தயாராக இருப்பதால் இது போன்ற நாடகத்தை நடத்தியிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியும் திமுக கைப்பற்றும் எனவும் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Updated On: 19 Feb 2022 6:37 AM GMT

Related News