/* */

அரியலூரில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளை காலை முதல் அமல்படுத்தப்படுகிறது. இதில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்று கலெக்டர் ரத்னா தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூரில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் கலெக்டர் தகவல்
X

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு நாளை காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயக்க அனுமதிக்கப்படுகிறது.

இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய மளிமை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சிமீன் கடைகள் தவிர இதரகடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து உணவங்களிலும் பார்சல் சேவை) வழங்கமட்டும் அனுமதிக்கப்டும். தேநீர் கடைகள் நண்பகல் 12.00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது. தங்கும் விடுதிகள் செயல் பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளார்களுக்காகவும், மருத்துவ சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே, அறிவித்தப்படி, இறப்பு சார்ந்த நிகழ்களில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச்சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள் பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

மேலும், அனைத்து தனியாலீ; அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

விதிவிலக்க அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டுதலங்ளிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும்,

தினமும் நடைபெறும் பூஜைகள், பிராத்தனைகள், சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை. நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல் பட அனுமதி இல்லை. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்குகிடையேயான தனியார் அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதைவிற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை இயங்க அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும், பார்சல் சேவைமட்டும் அனுமதிக்கப்படுகிறது.

அம்மா உணவகங்கள் தொடா;ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 வரை அனுமதிக்கப்படும். நியாய விலைக்கடைகள் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை செயல்படும்.

கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோகனை சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.


Updated On: 9 May 2021 2:30 PM GMT

Related News