/* */

சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

அரியலூர் - சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
X

அரியலூர் - சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தியும், வேலையின்மை பிரச்சனையை தீர்க்க, வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் சந்திரசேகர் வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், அழகானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

காமராஜர் சிறையில் இருந்து ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர் அரியலூர் பேருந்து நிலையம் நுழைவாயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏழை எளிய மக்கள் பாதிக்கும் வகையில் உள்ள பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க வேண்டும் உணவு பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை வாபஸ் பெற வேண்டும். நாட்டின் நிலவிவரும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட பொறுப்பாளர்கள் அமானுல்லா, பாலசிவகுமார், ஆர். தியாகராஜன், அழகானந்தம், ரவிச்சந்திரன், சகுந்தலா தேவி, பழனிமுத்து, செந்தில், அரியலூர் நகரம் சங்கர், ராஜா ரமேஷ், ரகுபதி, ஆர் கர்ணன், வெங்கடாசலம், கடம்பூர் ரவிச்சந்திரன், சரண் ரவி உள்ளியக்குடி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 6 Aug 2022 2:09 PM GMT

Related News