/* */

3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள்

3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள்
X

அரியலூர் மாவட்டத்தில் 82.45 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 5 லட்சத்து 30 ஆயிரத்து 983 வாக்காளர்கள் வாக்களிக்க 753 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவின் இறுதியில் அரியலூர் மாவட்டத்தில் 82.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து நேற்று இரவு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இந்த இயந்திரங்கள் அனைத்தும் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் அறையில் பூட்டி சீல் இடப்பட்டன. மேலும் இந்த அறைக்கு முன்பாக 24 மணி நேரமும் இயங்கும் வெப் கேமராவும் துப்பாக்கி ஏந்திய காவலரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணியில் சுழற்சி அடிப்படையில் 100 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 7 April 2021 9:30 AM GMT

Related News